Search This Blog

Saturday, September 10, 2011

ஆயிரமா? ஒன்றா ?

ஆயிரம் விண்மீன்கள் இருந்தாலும்
ஒரு நிலவு தனித்து நிற்கும்
ஆயிரம் பொய் சொன்னாலும்
ஒரு உண்மை தனித்து நிற்கும்
ஆயிரம் மூடர்கள் இருந்தாலும்
ஒரு புத்திசாலி தனித்து நிற்பான்
ஆயிரம் தோல்விகள் வந்தாலும்
ஒரு வெற்றி நிலைத்து நிற்கும்
ஆயிரம் ஏரிகள் இருந்தாலும்
ஒரு கடலுக்கு இணையாகாது
ஆயிரம் கோள்கள் இருந்தாலும்
அண்ட சராசரம் ஒன்றுதான்
ஆயிரம் மின்னல்கள் வந்தாலும்
ஒரு சூரியனுக்கு இணையாகாது
ஆயிரம் செல்கள் உடலாக இருந்தாலும்
ஒரு செல்லில்தான் ஆரம்பம்
ஆயிரம் நற்சொல்களால் வரும் பெருமை
ஒரு தீய சொல்லால் வரும் சிறுமை
ஆயிரம் ஜாதிகள் இருந்தாலும்
ஒரு இனம் அது மனித இனம்
ஆயிரம் பேர் ஊழல் செய்தலும்
ஒரு நல்ல தலைமையால் அதை மாற்ற முடியும்



Search This Blog