Search This Blog

Saturday, September 10, 2011

ஊழல்

அண்ணல் காந்தியால் ஒழிக்க முடியாதது
அண்ணா ஹாசரேவால் ஒழிக்க  முடியாது
ஊழழை ஒழிக்க நான் கண்ட வழி
ஒவ்வொரு பெற்றோரும் பொய் கணக்கை வேண்டுமானால் அரசாங்கத்திடம் காட்டலாம்
உண்மையான வருமானத்தை தங்கள் பிள்ளைகளிடம் காட்டவேண்டும்
பெற்ற பிள்ளைகளிடம் பொய் பேசுபவர்கள்  நல்ல மனிதர்களாக இருக்க முடியாது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
ஊழல் செய்பவன் திருந்தாவிட்டால் ஊழல் ஒழியாது.
கற்றுக்கொள்ள வேண்டியவன் எல்லாம் கற்பிப்பதும்
தகுதி இல்லாதவன் எல்லாம் பதவியில் இருப்பதும்
பொறுப்பு இல்லாதவன் எல்லாம் பொறுப்பில் இருப்பதும்
சுய சிந்தனை இல்லாதவன் எல்லாம் பகுத்தறிவு பேசுவதும்
அயோக்கியத்தனம் செய்பவனெல்லாம் ஆன்மிகம் பேசுவதும்
சமீப கால சமுதாய வீழ்ச்சி, இதில் ஏதும் இல்லை சூழ்ச்சி
இப்போது வேண்டுவது சமுதாய மறுமலர்ச்சி
தனி மனித சிந்தனை மாறினால் ஒழிய ஊழல் ஒழியாது.
தனி மனித சிந்தனை வளர ஒழுக்கமான உயர் கல்வி  அவசியம்
கல்வி வியாபாரமானதால் வந்த வினை இது
கல்வியில் போதிப்போம் நீதி போதனை
காலத்திற்கும் மாற்றுவோம் மீதி வேதனை
வாழ்க பாரதம்!!

Search This Blog