Search This Blog

Wednesday, September 28, 2011

கல்வெட்டுகளால் அறிந்தோம்
மன்னர் கால வரலாறு
குகை கோவில்களால் அறிந்தோம்
ஆதி மனிதன் வரலாறு
கற்கோவில்களால் அறிந்தோம்
சேர சோழ பாண்டியன் வரலாறு
மணி மண்டபங்களால் அறிந்தோம்
மன்னர் கால தொலைதூது வரலாறு
ஏட்டு சுவடிகளால் அறிந்தோம்
பண்டைய இலக்கிய வரலாறு
ஓட்டைக் காசுகளால் அறிந்தோம்
பண்டைக்கால பண்டமாற்று
முதுமக்கள் தாழிகளால் அறிந்தோம்
மூத்தோர் தம் அந்திமக்கால வரலாறு
எலும்புக் கூடுகளின் மிச்சத்தால் அறிந்தோம்
ஆதி மனிதன், தாவர பிராணிகள் வரலாறு
கணினி கண்டோம்
கல்வெட்டுக்களை மறந்தோம்
கான்கிரிட் கண்டோம்
கற்கோவில்களை மறந்தோம்
காகிதம் கண்டோம்
குறுந்தகடு கண்டோம்
ஏட்டுச்சுவடிகளை மறந்தோம்
கைத்தொலைபேசி கண்டோம்
கடிதங்களை மறந்தோம்
புறாக்கள் தூது போனது அந்தகால கட்டம்
புறாக்களை பாதுகாக்க போட்டோம் இந்தகால சட்டம்
பழங்கால புதையல் சொல்கிறது அக்கால மனிதன் நிராசை
பார் நோகும் ஊழல் சொல்கிறது இக்கால மனிதன் பேராசை
மாதம் மும்மாரி பொழிந்தது அந்தக்காலம்
மாறிமாறிப் பேய்கிறது இந்தக்காலம்
மணி அடித்தல் கிடைத்தது நீதி அந்தக்காலம்
"மணி" அடிப்பதால் வீழ்ந்தது நீதி இந்தக்காலம்
கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்தது அந்தகாலம்
கூடுகூடாய் வாழ்வது இந்தகாலம்
ஒற்றுமையாய் வாழ்ந்தது அந்தகாலம்
ஒற்றுமையாய் திருடுவது இந்தகாலம்
கடன் வாங்கினால் போகும் பெருமை அந்தகாலம்
கைநிறைய கடன் அட்டை இருந்தால் பெருமை இந்தகாலம்
போக்குவரத்து வசதி இல்லாததால் சிறந்தது உறவு அந்தகாலம்
போக்குவரத்து மிகுதியால் வீழ்ந்தது உறவு இந்தகாலம்
வேலை முடிந்தால் வீடு வந்தது அந்தகாலம்
வேலை முடிந்ததும் வீண் வேலை ஆரம்பம் இந்தகாலம்
அடுத்தவனை கெடுத்தால் கேவலம் அந்தகாலம்
அடுத்தவனை கெடுத்து வாழ்வது இந்தகாலம்
இத்தனையும் மாறுவது எக்காலம்
அத்தனையும் மாறினால் உள்ளது எதிர்காலம்



Search This Blog