Search This Blog

Saturday, September 10, 2011

மரண தண்டனை

இயற்கையின் வினோதம் ஜனனம்
நிபந்தனை இல்லாமல் பிறக்கும் உயிர்
தண்டனையோடு இறப்பதைத்  தவிர்க்கவேண்டும்
குற்றத்திற்குத்  தண்டனை மரணமா?
எந்த குற்றத்திற்கு என்ன தண்டனை?
ஏதேனும் வரைமுறை உண்டா?
என் நோக்கில்
மரண தண்டனை விதிப்பதே குற்றம்
உயிரைப் பறிப்பது குற்றமானால்
எந்த உயிர் மேலானது ?
குற்றப்  பின்னணி என்ன?
உணர்ச்சியின் விளிம்பில் செய்வது குற்றமா?
திட்டமிட்டுச் செய்வது குற்றமா?
குற்றம் செய்யத் திட்டமிடுபவன் நிச்சயம் மனிதன் அல்ல
ஆசை, பேராசை, பொறமை, சோம்பேறித்தனம்
அடுத்தவன் வாழ்வில் அத்துமீறல்
இவையெல்லாம் குற்றம்தான்
குற்றம் செய்பவனைத் திருத்தத் திட்டமிடு
குற்றத்தை குறைக்க சமூக மாற்றம் அவசியம்
குற்றத்திற்கு தண்டனை மரணம் என்றால்
இவ்வுலகில் யாரும் வாழத்  தகுதியற்றவரே
குற்றமற்றவர் யாரோ, அவரே
தண்டனை கொடுக்க தகுதியானவர்
அப்படி ஒருவர் உளறா? 
இனிமேலாவது பிறக்கட்டும் 

Search This Blog