இந்துமதத்தை நம்புபவனுக்கு யேசுவும், அல்லாவும் கடவுள் இல்லை
யேசுவை நம்புபவனுக்கு அல்லாவும், இந்துகடவுளும் இல்லை
அல்லாவை நம்புபவனுக்கு யேசுவும், இந்துகடவுளும் இல்லை
நான் கடவுளே இல்லை என்கிறேன்
இதில் என்ன பிரச்சினை?
எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கடவுளை மனிதன் இன்னும் படைக்கவில்லை!
எல்லோரும் சமம் என்று ஏற்றுக்கொண்ட தலைமை இன்னும் உருவாக வில்லை!
எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் கடவுளும், எல்லோரும் சமம் என்று ஆட்சி நடத்துகிற தலைமையும் வரும்வரை இந்த உலகில் அமைதி இல்லை!
சாதியும் அப்படித்தான்
ஒரு சாதிக்காரனுக்கு இன்னொரு சாதிக்காரனைப் பிடிப்பதில்லை
நான் சாதியே இல்லை என்கிறேன்
இதில் என்ன பிரச்சினை?
.ந.ப.