நெருப்பு
நெருப்பு தன்னைத்தானே எரித்துக் கொண்டு
மற்றவர்களுக்கு ஒளி தருகிறது
காற்று
காற்று தன்னை
அசுத்தப் படுத்திக் கொண்டு
மற்றவர்களுக்கு உயிர் தருகிறது
நிலம்
நிலம் தன்னைக்
காயப்படுத்திக் கொண்டு
மற்றவர்களுக்கு உயிர் தருகிறது
தண்ணீர்
தண்ணீர் தன்னை
அசுத்தப் படுத்திக் கொண்டு
மற்றவர்களை சுத்தப் படுத்துகிறது
ஆகாயம்
ஆகாயம் தன்னிடம் சேரும்
நச்சுக்களையெல்லாம் தாங்கிக் கொண்டு
மற்றவர்களுக்கு சுத்தத்தை தருகிறது.