"போகும்போது எதைக் கொண்டு போகிறோம் "
இது அன்றாடம் கேட்கும் ஒரு பேச்சு
விரக்தியில் பேசும் வீண் பேச்சு
கொண்டுபோவதென்பது நிச்சயம் முடியாது
ஆனால்
நிச்சயமாக கொடுத்துவிட்டு போகலாம்
மற்றவர்களுக்கு உதாரணமான
நல்ல வாழ்க்கை
நல்ல கண்டுபிடிப்புகள்
நல்ல இலக்கியம்
இப்படிப் பல
இதை புரிந்துகொண்டவர்களே நல்ல வாழ்க்கை வாழ்பவர்கள்
