Search This Blog

Saturday, April 25, 2026

23/4/2026 ஜனநாயகத் திருவிழா - Tamilnadu

 23/4/2026

இன்று

ஜனநாயகத் திருவிழா: 

ஒரு விழிப்புணர்வு அழைப்பு

தமிழக வாக்காளர்களே,

இன்று உங்கள் நாள்!

விரல் நுனியில் பதியும் மையில்,

எழுதுங்கள் நாட்டின் நாளைய வரலாற்றை!

நிர்ணயிக்கப் போவது நீங்கள்தான் 

நமது அடுத்த ஐந்து ஆண்டுகளின் தலைவிதியை.

உங்கள் வாக்கு:

அது வெறும் அடையாளம் அல்ல; உங்கள் உரிமை.

அது அமைதியானது அல்ல; அதிகாரத்தின் குரல்.

அது சாதாரண மை அல்ல; மாற்றத்தின் அஸ்திவாரம்.

வாக்குவாதம் செய்யயுங்கள்

வாக்குக்குப் பணம் பெறாதீர்!

ஐந்து நிமிடம் சிந்திப்பதைத் தவிர்த்து,

ஐந்தாண்டுகளை விற்றுவிடவேண்டாம்

கையில் வாங்கும் அந்தச் சில தாள்கள்

உங்கள் கையில் வைக்கும் மையை விட

கறைபடிந்த தாள்கள்

உங்கள் உரிமையை காசாக்காமல் ஓட்டாக மாற்றுங்கள்

உன் குரல் சட்டசபையில் ஒலிக்காது;

வாக்குச்சாவடியில் அமைதியாக ஒலிக்கட்டும்

பணம் வாங்கி வாக்களிப்பது, நம்மை நாமே அடிமையாக்கிக் கொள்வதற்குச் சமம்

கட்சியை மட்டும் பார்க்க வேண்டாம்

உங்கள் தொகுதி வேட்பாளரைப் பார்த்து

செயல்திறன், நேர்மை,

மக்கள் சேவை — அனைத்தையும் மதித்து.

சிந்தித்து வாக்களிப்போம்,

சிறந்த தலைமையைத் தேர்ந்தெடுப்போம்!"

ந.ப.

Search This Blog