Search This Blog

Sunday, December 4, 2016






நிலைத்த புகழ் வேண்டுமா ?

நிலையாத பணம் வேண்டுமா ?

அதிகாரம் கொடுக்கும் ஆணவத்தில் 

அடுத்தவருக்கு துன்பம் கொடுத்து 

ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன் ?

ஒரு நொடியில் மாறிவிடும் வாழ்க்கை 

வாழ்ந்து கெட்டவர்களைப் பார்த்து 

வாழும் தலைமுறை கற்றுக்கொண்டதென்ன?

வாழ்க்கை என்பது அனைவதர்க்காகவே ஏற்றப்பட்ட விளக்கு

நாளை என்பது நாம் வாழ்வதாக இருக்கலாம் 

அல்லது வாழ்ந்ததாக இருக்கலாம்

நமக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் 

தள்ளிப்போட முடியாதது மரணம்

விட்டது விட்டபடி தொட்டது தொட்டபடி 

ஒரு கடைசி வாய்ப்பு கேட்க முடியாமல் 

அனைத்தும் ஒரு நொடியில் மாறிவிடும்

இன்றைய தேவை 

அடுத்தவர் வாழ்க்கையை 

வளமாக மாற்றும் மாற்றுச் சிந்தனை !





Search This Blog