Search This Blog

Wednesday, March 8, 2017

கோவிலுக்குப் போனேன்
மனம் உருகிப் பிரார்த்திக்கும் போது
அர்ச்சகர்
சாமிக்குத் தட்சிணை போடு என்றார்
கல்லான சாமியைக் கண்டு மனம் உருகி
தாராளமாய்ப் போட்டேன்
மனமெல்லாம் நிறைந்து
கோவிலுக்கு வெளியே வந்தபோது
பிச்சைக்காரர்
சாமி பிச்சை போடுங்கள் என்றார்
உயிருள்ள மனிதனின் நிலையைக்கண்டு
மனம் இறுகிக் கல்லானது
சற்று சிந்தித்தபோது உறைத்தது
சாமிக்கு தட்சிணை போடுபவனும் நான்
பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுபவனும் நான்
கோவிலுக்கு உள்ளே ஆசாமியாக இருந்த நான்
கோவிலுக்கு வெளியே சாமியாகிவிட்டேன்
கல்லான சாமி எதுவும் கொடுக்கப்போவதில்லை
கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கொடுப்பது நான்
ஆக,
என்னுள்ளேயே சாமி இருக்கிறது என்ற உண்மை புரிந்தது
கோவிலுக்குப் போவதை நிறுத்தி விட்டேன்
.N.P.

Search This Blog