கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்று நம்பியது முந்தைய தலைமுறை
கடவுளை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்கிறது இன்றைய தலைமுறை
முந்தைய தலைமுறையினருக்கு கடவுள் என்பது ஒரு மகா சக்தி. வாழ்க்கையின் கஷ்டங்கள், இயற்கைச் சீற்றங்கள், நோய்கள் என எல்லாவற்றையும் அந்தச் சக்தியிடம் ஒப்படைத்தார்கள்.
"அவன் இன்றி அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஒருவிதமான மன அமைதியையும், பாதுகாப்பையும் கொடுத்தது.
இன்றைய சூழலில் "கடவுளைக் காப்பாற்றுவது" என்ற கோணத்தில் பல விஷயங்கள் நடக்கிறது. மதம் மற்றும் கடவுள் சார்ந்த அடையாளங்களின் பாதுகாவலர்கள் என்ற நோக்கில், மனிதர்கள் தங்களை அந்தத் தத்துவங்களின் காவலர்களாகக் கருதுகிறார்கள்.
ஆக, உண்மையான கடவுள் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாயை என்று புரிந்து கொள்ளலாமா?
கடவுளை மனிதன் உருவாக்கினானா,
மனிதனை கடவுள் உருவாக்கினானா
என்பதை விட
மனிதன் சக மனிதனுக்கு என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.
.ந.ப.
