நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்களைச் சுற்றியுள்ள அல்லது உங்களைச் சார்ந்த மனிதர்களின் மனநிலை என்ன?
உங்களின் மகிழ்ச்சி மற்றொருவருக்குத் துன்பத்தைத் தரக்கூடாது.
உங்களின் மகிழ்ச்சி என்பது மற்றவர்களின் தோல்வியிலோ அல்லது மற்றவர்களை மட்டம் தட்டுவதிலோ கிடைப்பதாக இருக்கக்கூடாது. தனக்குக் கிடைத்த நல்வாழ்வு பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே உயரிய மகிழ்ச்சி.
நீங்கள் துன்பத்தில் இருக்கும்போது உங்களைச் சுற்றியுள்ள அல்லது உங்களைச் சார்ந்த மனிதர்களின் மனநிலை என்ன?
உங்களின் துன்பம் மற்றொருவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடாது.
நாம் துவண்டு போய்விடுவதைப் பார்த்துப் பிறர் எள்ளி நகையாட இடம் கொடுக்கக்கூடாது.
துன்பம் வரும்போது அதைக் கண்ணியத்துடனும், பொறுமையுடனும் எதிர்கொண்டால், நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் கூட வியந்து நிற்பார்கள்.
நம் துன்பத்தில் எதிரி கூட மகிழக்கூடாது.
.ந.ப.
