2/11/2012 Washington D.C
அருமை நண்பர்
நாச்சிமுத்து சின்னசாமி
நாச்சிமுத்து சின்னசாமி
(1960-2012)
இங்கு கூடியிருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்முதற்கண் எனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகவும் குறைந்த நாட்களே வாழ்ந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் சின்னசாமி அவர்கள்.
என்னை பொறுத்தவரை சின்னசாமி ஒரு சிறந்த நண்பர். அதற்க்கு மேல் அவர் ஒரு சிறந்த மனிதர்
எங்களது நட்புக்கு வயது இருபத்தி எட்டு. அதாவது சின்னசாமி அவர்களின் வாழ்கையில் பாதி நாட்களுக்கு மேல் அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப்படுகிறேன். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் மிகவும் தோழமையுடன் பழகிய நண்பர்.
நான் சின்னசாமி அவர்களை அவரது கல்லூரி நாட்களில் இருந்து அறிவேன். ஒன்றாகவே உண்டு, உறங்கி உற்ற நண்பனாகவும், தோழனாகவும் ஆசானாகவும் வாழ்ந்த அருமை நண்பரை இன்று இழந்து விட்டேன் என்று என்னும்போது இனிமேல் நான் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை. சம்பாதித்த பொருளை இழந்தால் மீண்டும் சம்பாதிக்கலாம். உயிர் நண்பர் மறைந்தால் மீண்டும் நம் வாழ்நாளில் கிடைப்பது அரிது. உற்ற நண்பரை இழப்பது பெற்ற தாயை இழப்பதற்கு நிகரானது. சின்னசாமி போன்ற நண்பரை இனி எங்கு காண்பேன்.
பல சந்தர்பங்களில் நான் துவண்டு போன நேரத்திலெல்லாம் அவரது எளிமையான அணுகுமுறையும் தீர்கமான முடிவுகளும் என்னை வியக்க வைத்திருக்கிறது.
நாங்கள் சென்னையில் ஒன்றாக தங்கி படிக்கும் காலத்தில் மற்ற மாணவர்களெல்லாம் பல வழிகளில் பொழுது போக்கி கொண்டிருக்கும் வேளையில் சின்னசாமி மற்றும் அணைத்து நண்பர்களும் முக்கியமாக செய்தது என்ன வென்றால் வாழ்கையில் கடின உழைப்பால் முன்னேறிய பல நல்ல தலைவர்களையும், பேராசியர்களையும் சந்திப்பது தான் எங்களது முக்கிய பொழுது போக்கு. அப்படிப்பட்ட சந்திப்புகளால் நாங்கள் பெற்றது, கற்றது ஏராளம். அதுவே எங்கள் வாழ்வின் ஆதாரம். கடின உழைப்பே எங்கள் தாரக மந்திரம். வெற்றியே எங்கள் இலக்கு.
வாழ்வில் வெற்றிபெற நாங்கள் இரு வேறு பாதையில் பிரிந்து இருவேறு கண்டங்களில் வாழ்ந்தாலும் எங்கள் நட்பு பிரியவில்லை. ஆனால் இன்று ஒரே இடத்தில இப்படி மீண்டும் சந்திக்க நேர்ந்ததை நினைக்கும் பொது வாழ்வில் எல்லாவற்றியும் இழந்துவிட்ட மன நிலைதான் எனக்கு இப்போது.
சின்னசாமி அவர்களை நினைக்கும் பொது நம் நினைவுக்கு வருவது என்ன? அவருடன் பழகிய அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விஷயம் என்னவென்றால், சின்னசாமி அவர்களின் எளிமை, தன்னடக்கம், கனிவான பேச்சு. அவர் கோப பட்டு நான் பார்த்ததில்லை, அதிர்ந்து பேசியதில்லை. மற்றவர்களை பற்றி தவறாக பேசியதில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுகொண்ட யதார்த்தமான மனிதர். எளிமையாக ஆரம்பித்த வாழ்க்கையை எளிமையாகவே வாழ்ந்தவர். நண்பர்கள் கூட்டத்தையே சொத்தாக சம்பாதித்தவர். நாம் இறக்கும் பொது எதுவும் கொண்டு போவதில்லை என்று சொல்வது எவ்வளவு தவறானது என்பது இங்கே நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை நண்பர்களை இன்று அவருக்கு பக்கத்தில் கொண்டுவந்து நான் சம்பாதித்தது இதுதான் என்று அதே அடக்கத்துடன் சொல்லிக்கொண்டு அமைதியாக மீலாத் துயிலில் சின்னசாமி இன்று ஆழ்ந்துவிட்டார். அதற்க்கு இங்கும் இந்தியாவிலும் கூடியிருக்கும் நண்பர்களே சாட்சி.
சின்னசாமி அவர்களின் இழப்பு எதிர்பாராதது. ஈடு செய்ய முடியாதது. அவர் சீக்கிரமே நம்மை விட்டு பிரிந்துவிட்டாலும் அவர் எவ்வளவு சிறப்பான வாழ்கை வாழ்ந்திருக்கிறார் என்பதை நினைக்கும் பொது மிகவும் பெருமையாக இருக்கிறது. அனைவராலும் நேசிக்கப்பட்ட அருமையான மனிதர். அவருடன் சிறந்த நட்புடன் வாழ்ந்தேன் என்று நினைக்கும்போதே பெருமையாக இருக்கிறது. என் வாழ்வில் பல சந்தர்பங்களில் என் சுக துக்கங்களில் பங்கு பெற்றதை மிகவும் நன்றியுடன் நினைத்து பார்கிறேன். என் இதயத்தில் என்றும் அவர் இருப்பார், அவர் வாழ்ந்த சிறப்பான வாழ்கை என்றும் எனக்கும் மற்றும் எல்லோருக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சின்னசாமி அவர்களின் இழப்பு எதிர்பாராதது. ஈடு செய்ய முடியாதது. அவர் சீக்கிரமே நம்மை விட்டு பிரிந்துவிட்டாலும் அவர் எவ்வளவு சிறப்பான வாழ்கை வாழ்ந்திருக்கிறார் என்பதை நினைக்கும் பொது மிகவும் பெருமையாக இருக்கிறது. அனைவராலும் நேசிக்கப்பட்ட அருமையான மனிதர். அவருடன் சிறந்த நட்புடன் வாழ்ந்தேன் என்று நினைக்கும்போதே பெருமையாக இருக்கிறது. என் வாழ்வில் பல சந்தர்பங்களில் என் சுக துக்கங்களில் பங்கு பெற்றதை மிகவும் நன்றியுடன் நினைத்து பார்கிறேன். என் இதயத்தில் என்றும் அவர் இருப்பார், அவர் வாழ்ந்த சிறப்பான வாழ்கை என்றும் எனக்கும் மற்றும் எல்லோருக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சின்னசாமி அவர்கள் இப்போது சொர்க்கத்தில், நாம் இப்போது அவரது நினைவு அஞ்சலி கூட்ட்டத்தில். இந்த நேரம் அவரது மறைவை நினைத்து வருத்தப்படகூடிய நேரமல்ல, அவர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பெருமைப்பட வேண்டிய நேரமிது. என்றும் சின்னசாமியை நினைத்து பெருமைப்படுங்கள். மற்றவர்கள் அழுவதை அவர் விரும்பியதில்லை. தன்னை வருத்திக்கொண்டு மற்றவர்களை சந்தோசப்படுத்திய நேர்மையான மனிதர். இன்னும் சிறிது நேரத்தில் அவரது பூத உடல் நம் கண்ணை விட்டு மறைய இருக்கிறது, இந்த நேரத்தில் கண்ணீர் சிந்தாமல் அவர் நம்முடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து, அவர் நம்முடன் இருப்பதாகவே நினைத்து, அவருடன் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததை நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகொள்வோம்.
“”வாழ்க்கை என்பது அனைவதர்க்காகவே ஏற்றப்பட்ட விளக்கு. நாளை என்பது நாம் வாழ்வதாக இருக்கலாம் அல்லது வாழ்ந்ததாக இருக்கலாம். நமக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் தள்ளிப்போட முடியாதது மரணம். விட்டது விட்டபடி தொட்டது தொட்டபடி ஒரு கடைசி வாய்ப்பு கேட்க முடியாமல் அனைத்தும் ஒரு நொடியில் மாறிவிடும்.””
சின்னசாமியை நாம் நிரந்தரமாக இழந்துவிடவில்லை. சிலகாலம் அவர் நம்முடன் இருக்கபோவதில்லை. ஆனால் ஒரு சரியான நேரத்தில் நானும் நாம் எல்லோரும் அவர் இருக்கும் இடத்தில் சேர்வோம் அங்கும் நமது வாழ்க்கை தொடரும்......