Search This Blog

Sunday, November 18, 2012

சொல்வது எளிது! செய்வது கடினம்!

யோக்கியமானவன் என்று சொல்வது எளிது
யோக்கியமானவனாய் வாழ்வது கடினம்

பொய் சொல்ல மாட்டேன் என்று சொல்வது எளிது
பொய் சொல்லாமல் வாழ்வது கடினம்

நல்லவன் என்று சொல்வது எளிது
நல்லவனாய் வாழ்வது கடினம்

படித்தவன் என்று சொல்வது எளிது
பண்புள்ளவனாய் வாழ்வது கடினம்

அறிவுரை கூறுவது எளிது
அறிவுரையின் படி வாழ்வது கடினம்

நண்பன் என்று சொல்லிக்கொள்வது எளிது
நல்ல நண்பனாய் வாழ்வது கடினம்

சந்தோஷ உணர்ச்சி எளிது
சந்தோசத்தை ஏற்படுத்துவது கடினம்

அன்பாக இருப்பதுபோல் நடிப்பது எளிது
உண்மையான அன்பு செலுத்துவது கடினம்

ஆசைப் படுவது எளிது
ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நேர்மையாய்
உழைப்பது கடினம்





Search This Blog