ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்
ஆயிரமாயிரம் உயிரினங்கள்
அண்ட சராசரங்கள் அனைத்திலும் ஒரு ஒழுங்கு
பாழாய்ப்போன மனிதர்களிடம் தான்
எத்தனை ஒழுங்கீனம் !
எத்தனை ஏற்றத்தாழ்வு !
அரை குறை ஆடையுடன் ஆயிரம் மீட்டர் துணி நெசவு செய்தான்
-நெசவாளி
துண்டு இடம் கூட இல்லாதவன் பல ஏக்கர் பயிர் செய்தான்
-கூலித்தொழிலாளி
அழுக்குத் துணியைக் கட்டிக்கொண்டு அடுத்தவன் துணிக்கு வெல்லாவி வைத்தான்
-சலவைத் தொழிலாளி
தன் நிலை மறந்து பத்து பைசா பிச்சை போட்டவரை "நல்ல இருங்க சாமி" என்று வாழ்த்தினான்
-பிச்சைக்காரன்
தகரத் தட்டில் சாப்பிடுபவன் சமைத்ததை தங்கத் தட்டில் சாப்பிடுகிறான்-
பணக்காரன்
ஒண்ட இடம் கூட இல்லாத நிலையில் கட்டினான் பல மாடி கட்டிடம்
- கட்டிடத் தொழிலாளி
உழைக்கத் தெம்பிருந்தும் உட்கார்ந்து திங்க ஆசைப்படுகிறான்-
சோம்பேறி
பதிந்தது சில....பட்டியல் பெரிது ......
.ந.ப .