என் தாய்
கருவாய் உதித்தபோது
மகிழ்ந்தாய்
ஆணா , பெண்ணா அறியாதபோதும்
அகமகிழ்ந்தாய்
பனிக்குடம் நிறைத்துக்
காத்தாய்
பனிக்குடம் உடைத்துப்
பிரசவித்தாய்
பிரசவ வேதனையிலும் என் முகம் பார்த்துப்
புன்னகைத்தாய்
உன்பசி மறந்து என்னை
அரவணைத்தாய்
உலகத்தோர் மெச்ச
வளர்த்தாய்
கடல் கடந்து வாழ்கின்றபோதும்
கண நேரமும் மறக்காமல்
சிந்தையில் வைத்து மகிழ்கின்ற
என்தாய்
அவரை
அன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அனுதினமும் வணங்கி மகிழ்கிறேன்