என் ஆரம்ப வேலையில் அதிக சம்பளமில்லை
வெளியே சொல்லவேண்டாம் என்றன உறவுகள்
ஏனென்றால் அது அவர்களுக்குக் கௌரவமாக இல்லை
மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதால்
அடுத்தடுத்த வேலையில் அதிக சம்பளம் கிடைத்தது
வெளியே சொல்லவேண்டாம் என்றன உறவுகள்
ஏனென்றால் அது அவர்களுக்குக் கௌரவமாக இருந்தது
மற்றவர்கள் பொ றாமைப் படுவார்கள் என்பதால்
எந்த நிலையிலும் நான் நானாக இருந்து
என்கடமையைச் செய்ததைத் தவிர
என்னிடத்தில் எந்த மாற்றமும் இல்லை!
மற்றவர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் நான் பொறுப்பு இல்லை !