வாழ்க்கையை கனவாக நினைத்து வாழுங்கள்.
கனவில் வருவது நிஜமல்ல அது கனவுதான் என்று தெரியும் வரை
ஒரு திகில் கனவு காணும்போது நாம் அலறித் துடிக்கிறோம். ஆனால், விழித்தவுடன் "அப்பாடா, அது வெறும் கனவுதான் என்று நிம்மதி அடைகிறோம். வாழ்க்கையையும் ஒரு கனவாகப் பார்க்கப் பழகிவிட்டால், இங்கு ஏற்படும் தோல்விகளும், அவமானங்களும் நம்மை அதிகமாகப் பாதிக்காது. இதுவும் கடந்து போகும் என்ற மனப்பக்குவம் தானாக வரும்.
கனவிலேயே "இது கனவுதான்" என்று சில சமயம் அறிந்துகொள்வதைப் போல, வாழ்ந்து கொண்டிருக்கும் போதே "இது நிலையற்றது, ஒரு மாயத் தோற்றம்" என்று உணர்வதுதான் ஆன்மீக விழிப்புணர்வு அல்லது ஞானம்.
எல்லாம் மாயையாக இருப்பதால்தான் இருப்பதெல்லாம் இல்லாததாக மாறுகிறது.
காண்பதெல்லாம் அணுக்களின் கூட்டு உருவம் அவ்வளவுதான்.
