மனத்துக்கண் மாசிலன் ஆதல் - குறளின் தாக்கம்
ஊருக்கு ஒழுக்கமாக வாழ்வதைவிட,
உள்ளுக்குள் ஒழுக்கமாக வாழ வேண்டும்
உலகம் நம்மைப் பார்க்கிறது என்பதற்காகக் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் வெறும் நடிப்பு.
ஆனால், யாரும் பார்க்காத இடத்திலும்
நாம் காட்டும் ஒழுக்கமே நமது உண்மையான குணம்.
நாம் பிறரை ஏமாற்றிவிடலாம்,
ஆனால் நம் மனசாட்சியை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. அகத்தூய்மை இல்லையெனில்
வெளி உலகப் புகழ் ஒரு பாரமாகவே இருக்கும்.
ஊருக்காக வாழ்பவர்கள்
சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவார்கள்.
உள்ளுக்குள் ஒழுக்கமாக இருப்பவர்கள் எக்காலத்திலும் எவ்விடத்திலும் தடம் மாற மாட்டார்கள்.
