Search This Blog

Friday, February 27, 2026

பிரபஞ்சத்தில் நிரந்தரம் எதுவும் இல்லை.

பிரபஞ்சத்தில் நிரந்தரம் எதுவும் இல்லை.

நட்சத்திரங்கள் பிறக்கின்றன, இறக்கின்றன

கோள்கள் உருவாகின்றன, சிதறுகின்றன

உயிரினங்கள் பிறக்கின்றன, அழிகின்றன

செல்கள் உருவாகின்றன, உடைந்து போகின்றன

அதனால் “இருப்பு” என்பது

ஒரு நேர இடைவெளியில் நிலைத்திருக்கும் வடிவம் மட்டுமே. 

எதுவும் இல்லாமல் போவதில்லை

வடிவம் மட்டுமே மாறுகிறது.

நம் உடலில் உள்ள அணுக்கள் எப்போதோ உருவானது. 

எப்போது உருவானது என்று தெரியாது.

அவ்வப்போது இடம் மாறுகிறது.

இன்று நம்மிடம் அவ்வளவுதான்.

நம் உடல் ஒரு இடைப்பட்ட நிலை- அவ்வளவுதான் 

பிரபஞ்சம் எப்படி உருவானது? தெரியாது.

எப்போது உருவானது? தெரியாது?

ஏன் உருவானது? தெரியாது?

எதற்காக உருவானது? தெரியாது?

Search This Blog