Search This Blog

Wednesday, March 4, 2026

தண்ணீரின் பரிமாணங்கள்

 தண்ணீரின் பரிமாணங்கள்


தாய்மையில் பாலாகும் தண்ணீர்

கடலில் அலையாகும் தண்ணீர்

மேகத்தில் மழையாகும் தண்ணீர்

உடலுக்குள் உயிராகும் தண்ணீர்


ஆற்றில் வெள்ளமாகும் தண்ணீர்

சோகத்தில் கண்ணீராகும் தண்ணீர்

சுவையில் உமிழ்நீராகும் தண்ணீர்

சிகரங்களில் பனியாகும் தண்ணீர்


துருவங்களில் தரையாகும் தண்ணீர்

கொதித்தால் ஆவியாகும் தண்ணீர்


நீரின்றி அமையாது உலகு.

Search This Blog