Search This Blog

Sunday, February 13, 2011

சொர்க்கம் உன் காலடியில்

எல்லோரும் அஞ்சுவது இறப்பிற்கு
இறக்கும் நாள் தெரிந்தால் வாழும் நாட்கள்  நரகமாகும்

சொர்க்கம் இருப்பது  உண்மை என்றால்
நரகம் இருப்பதும் கூட உண்மையாகும்
சொர்க்கத்தில் எல்லாம் கிடைக்கும் என்றாலும்
அங்கு செல்வதற்கு யாரும் இறக்கத் தயாரில்லை

நாம்  இருக்கும் இடம் நரகம் என்றாலும்
யாரும் இறக்கத் தேவையில்லை
சொர்க்கமோ, நரகமோ
இல்லாத ஒன்றை, யாரும் காணாத ஒன்றை
காணத் துடிக்கும் மனமே

ஒரு கணம் நில்!

நான் வாழும் பூமியே சொர்க்கபூமி
இங்கு இல்லாதது எங்கு இருக்க முடியும்

என்ன இல்லை இங்கு?

எல்லோருடைய ஆசைக்குத்  தேவையானது இங்கு இல்லாது  இருக்கலாம்
ஆனால் எல்லோருடைய தேவைக்கு வேண்டியது இங்கு எல்லாம் இருக்கிறது
அதற்க்கு மேல்
இல்லாததைப்  படைக்க உனக்கு அறிவு இருக்கிறது

உன் தேவை என்ன?
உன் ஆசை என்ன?

இது சொர்க்கமா?
இல்லை நரகமா?

தேர்ந்தெடுப்பதும் அல்லது மாற்றுவதும் உன்கையில்

மனிதனே உழைக்கத் தயாராகு
உழைக்கத் தயாரானால்
சொர்க்கம் உன் காலடியில்
நரகம் உன் கனவில் கூட தெரியாது


Search This Blog