உண்மையும், உறவும்…
உண்மையாய் அன்பு கொடுத்தேன்,
உறவென நினைத்தவர்க்கே…
உணர்வுகள் ஒலியாய் போனது,
ஊமையாய் பதிலில்லை!
இதயத்தை நொறுக்கினார்கள்,
இடித்தது வார்த்தைகளால்;
இருட்டில் விட்டுப்போனேன்,
ஓர் ஒளியைத் தேடினேன்.
அங்கே தோன்றினார் ஒருவர்,
அன்பில் உறுதியாய்…
நண்பன் என்றொரு நிழல்,
நிலவாய் மிளிர்ந்தார்.
இடித்த இதயத் துண்டுகள்,
இணைக்கத் தொடங்கினான்;
இனிமை என்பதனை,
இணையாய் காட்டினான்.
உறவுக்கு மரியாதை,
நண்பனுக்குக் நன்றி;
உண்மை உள்ளத்தை உணர்வது,
உறவல்ல — நெஞ்சுள்ள நண்பர்கள் தான்.