இன்றைய சமுதாயம்
வெற்றிக்காக கௌரவம் பார்க்காமல் உழைத்தாலும்
வெட்டி வேலை வீண் வேலை என்று பேசும்
உதவி கேட்டால் உதாசீனம் செய்யும்
தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து பார்
தலைக்கணம் பிடித்தவன் என்று பேசும்
சுய மரியாதையுடன் வாழ்ந்து பார்
பிழைக்கத் தெரியாதவன் என்று பேசும்
எதையும் கண்டுகொள்ளாமல் உன்வழியில் போய்ப்பார்
உன்னைவிட உயர்ந்தவன் இல்லை என்று பேசும்
வீண் பேச்சில் மயங்காமல் விழிப்பாக இரு
செய்யும் தவறை சுட்டிக்காட்டிப் பார்
ஆணவக்காரன் என்று அறிவில்லாமல் பேசும்
எத்தனை அவமானம் வந்தாலும் உன்வழியில் செல்
உன் இலக்கு என்ன? உன் நோக்கம் என்ன?
நேர் வழியில் முயற்சி செய்
விடா முயற்சி நிச்சயம் வெற்றி தரும்