ஊழலில் ஈடுபடாதீங்கம்மா, அப்பா என்று வலியுறுத்துங்கள்: மாணவர்களுக்கு கலாம் வேண்டுகோள்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளது ஹோல்கார் அறிவியல் கல்லூரி. அங்கு அறிவியலால் உங்களுக்கு எதை கொடுக்க முடியும் என்ற தலைப்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மாணவர்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஊழலில் ஈடுபட வேண்டாம் என்று மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை வலியுறுத்த வேண்டும். வலுவான லோக்பால் மசோதா என்றாவது ஒரு நாள் நிறைவேறும். அன்று குற்றவாளிகள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவர். ஒரு நாள் சிறைகள் நிரம்பும். அப்போது நமக்கு வீடுகள் தேவைப்படும். அதனால் இந்த வேலையை நாம் ஏன் வீட்டில் இருந்தே தொடங்கக் கூடாது. உங்கள் பெற்றோர் யாராவது ஊழல் செய்தால் உடனே அதை நிறுத்துமாறு வலியுறுத்துங்கள். அது தான் இதற்கு தீர்வு என்றார்.
அறிவியல் கல்வியை உள்ளூர் மொழிகளில் பயிற்றுவிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் ஆசிரியர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் கேட்டுக் கொண்டார்.