Search This Blog

Monday, February 11, 2013

எதுவுமே தவறில்லை

திருட்டு
திருடுவது தவறில்லை
அடுத்தவன் உழைப்பைத் திருடாதவரை !!!

பொய்
பொய் பேசுவது தவறில்லை
அடுத்தவனை கெடுக்காதவரை !!!

ஏமாற்று
ஏமாற்றுவது தவறில்லை
அடுத்தவனை ஏமாற்றாதவரை !!!

ஆசை
ஆசைப்படுவது தவறில்லை
அடுத்தவன் பொருளின் மேல் இல்லாதவரை!!!

சோம்பேறி 
சோம்பேறியாய் இருப்பது தவறில்லை
அடுத்தவன் உழைப்பில் காலம் தள்ளாதவரை !!!

தவறு
தவறு செய்வதில் தவறில்லை
செய்த தவற்றையே திரும்பத் திரும்பச் செய்யாதவரை!!!

கோபம் 
கோபம் கொள்வதில் தவறில்லை
அதில் நியாயம் இருக்கும்வரை!!!

சுயநலம் 
சுயநலமாக இருப்பது தவறில்லை
பொதுநலம் கெடாதவரை !!!

குடி 
(மது) குடிப்பது தவறில்லை
குடி குடியைக் கெடுக்காதவரை !!!

Search This Blog