Search This Blog

Friday, November 27, 2015


சென்னை மழை

மழைக்கு முன்-

          கூவம் மட்டும் நாறியது

மழைக்குப்பின் -

          சென்னையே கூவமாக நாறியது

மழைக்கு முன்-

          நிலத்தடி நீர் பல அடி கீழே போனது

மழைக்குப்பின் -

        நிலத்திற்கு மேல் பல அடி மேலே நீர் போகிறது

மழைக்கு முன்-

        ஏரிகள்  இருந்த அடையாளம் தெரியவில்லை

மழைக்குப்பின் -

      ஏரிகளின் அடையாளம் துல்லியமாக தெரிந்தது

 மழைக்கு முன்-
         குடிக்கத் தண்ணியில்லை

மழைக்குப்பின் -
      ஊரெல்லாம் தண்ணீர் இருந்தும்
      குடிக்கத்தண்ணியில்லை




இனியாவது நீர் நிலைகளை ஆக்கிரமிக்காமல்
முறையான வடிகால் வசதி, பாதாள சாக்கடை அமைத்து
வருமுன் காப்போம், வளமுடன் வாழ்வோம்


Search This Blog