Search This Blog

Saturday, December 18, 2021

திருக்குறளின் சிறப்புகள்

வெண்பா

ஈற்றடி முச்சீரும் ஏனைய அடி நாற்சீரும் பெற்று அமைவதுதான் வெண்பா.

குறள் வெண்பா

வள்ளுவர் வழங்கிய திருக்குறளில், முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் அமைந்து குறள்வெண்பா என்ற அமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த வகையிலே திருவள்ளுவர் வழங்கிய 1330 குறட்பாக்களில் 23 குறட்பாக்களில் ஒருமுறை பயன்படுத்திய இரண்டாம் அடியில் உள்ள மூன்று சீர்களை மீண்டும் ஒருமுறை அதே அதிகாரத்திலோ, அல்லது மற்றொரு அதிகாரத்திலோ உள்ள மற்றொரு குறளில் பயன்படுத்தியுள்ளார். அவைகளைக் கீழே காண்போம்.

  • அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: மெய்யுணர்தல் குறள் எண்: 351

  • பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

  • · மருளானாம் மாணாப் பிறப்பு

  • பொருட்பால்: ஒழிபியல்: அதிகாரம்: நன்றியில் செல்வம்: குறள் எண்: 1002

  • பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்

  • · மருளானாம் மாணாப் பிறப்பு

==========================================================================

  • பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: தெரிந்து தெளிதல்: குறள் எண்: 508

  • தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

  • · தீரா இடும்பை தரும்

  • பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: தெரிந்து தெளிதல்: குறள் எண்: 510

  • தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்

  • · தீரா இடும்பை தரும்

==========================================================================

  • பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: உட்பகை: குறள் எண்: 884

  • மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா

  • · ஏதம் பலவும் தரும்

  • பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: உட்பகை: குறள் எண்: 885

  • உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

  • · ஏதம் பலவும் தரும்

==========================================================================

  • பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: இடனறிதல்: குறள் எண்: 492

  • முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

  • · ஆக்கம் பலவுந் தரும்

  • பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: சுற்றந் தழால்: குறள் எண்: 522

  • விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா

  • · ஆக்கம் பலவுந் தரும்

==========================================================================

  • பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: கூடா நட்பு: குறள் எண்: 826

  • நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

  • · ஒல்லை உணரப் படும்

  • காமத்துப்பால்: களவியல்: அதிகாரம்: குறிப்பறிதல்: குறள் எண்:1096

  • உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்

  • · ஒல்லை உணரப் படும்

==========================================================================

  • அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: இன்னா செய்யாமை: குறள் எண்: 311

  • சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

  • · செய்யாமை மாசற்றார் கோள்

  • அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: இன்னா செய்யாமை: குறள் எண்: 312

  • கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

  • · செய்யாமை மாசற்றார் கோள்

==========================================================================

  • பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நட்பாராய்தல்: குறள் எண்: 799

  • கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

  • · உள்ளினும் உள்ளஞ் சுடும்

  • காமத்துப்பால்: கற்பியல்: அதிகாரம்: நினைந்தவர் புலம்பல்: குறள் எண்:1207

  • மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

  • · உள்ளினும் உள்ளம் சுடும்

==========================================================================

  • அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: நடுவு நிலைமை: குறள் எண்: 115

  • கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

  • · கோடாமை சான்றோர்க் கணி

  • அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: நடுவு நிலைமை: குறள் எண்: 118

  • சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

  • · கோடாமை சான்றோர்க் கணி

==========================================================================

  • அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: ஒழுக்கம் உடைமை: குறள் எண்: 132

  • பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்

  • · தேரினும் அஃதே துணை

  • அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: அருளுடைமை: குறள் எண்: 242

  • நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்

  • · தேரினும் அஃதே துணை

==========================================================================

  • பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: அவை அறிதல்: குறள் எண்: 711

  • அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்

  • · தொகையறிந்த தூய்மை யவர்

  • பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: அவை அஞ்சாமை: குறள் எண்: 721

  • வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

  • · தொகையறிந்த தூய்மை யவர்

==========================================================================

  • காமத்துப்பால்: கற்பியல்: அதிகாரம்: உறுப்புநலன் அழிதல்: குறள் எண்:1234

  • பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

  • · தொல்கவின் வாடிய தோள்

  • காமத்துப்பால்: கற்பியல்: அதிகாரம்: உறுப்புநலன் அழிதல்: குறள் எண்:1235

  • கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

  • · தொல்கவின் வாடிய தோள்

==========================================================================

  • பொருட்பால்: ஒழிபியல்: அதிகாரம்: பன்புடைமை: குறள் எண்: 991

  • எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

  • · பண்புடைமை என்னும் வழக்கு

  • பொருட்பால்: ஒழிபியல்: அதிகாரம்: பன்புடைமை: குறள் எண்: 992

  • அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

  • · பண்புடைமை என்னும் வழக்கு

==========================================================================

  • காமத்துப்பால்: களவியல்: அதிகாரம்: நாணுத் துறவுரைத்தல்: குறள் எண்:1138

  • நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்

  • · மறையிறந்து மன்று படும்

  • காமத்துப்பால்: கற்பியல்: அதிகாரம்: நிறையழிதல்: குறள் எண்:1254

  • நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்

  • · மறையிறந்து மன்று படும்

==========================================================================

  • அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: மெய்யுணர்தல்: குறள் எண்: 355

  • எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்

  • · மெய்ப்பொருள் காண்ப தறிவு

  • பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: அறிவுடைமை: குறள் எண்: 423

  • எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

  • · மெய்ப்பொருள் காண்ப தறிவு

==========================================================================

  • அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: விருந்தோம்பல்: குறள் எண்: 81

  • இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

  • · வேளாண்மை செய்தற் பொருட்டு

  • அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: ஒப்புரவறிதல்: குறள் எண்: 212

  • தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

  • · வேளாண்மை செய்தற் பொருட்டு

==========================================================================

  • பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: இடுக்கண் அழியாமை: குறள் எண்: 628

  • இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

  • · துன்ப முறுதல் இலன்

  • பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: இடுக்கண் அழியாமை: குறள் எண்: 629

  • இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

  • · துன்ப முறுதல் இலன்

==========================================================================

  • அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: அவாவறுத்தல்: குறள் எண்: 369

  • இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்

  • · துன்பத்துள் துன்பங் கெடின்

  • பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: இகல்: குறள் எண்:854

  • இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

  • · துன்பத்துள் துன்பங் கெடின்

==========================================================================

  • அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: ஒழுக்கம் உடைமை: குறள் எண்: 136

  • ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்

  • · ஏதம் படுபாக் கறிந்து

  • அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: அழுக்காறாமை: குறள் எண்: 164

  • அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

  • · ஏதம் படுபாக் கறிந்து

==========================================================================

  • காமத்துப்பால்: களவியல்: அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்: குறள் எண்:1129

  • இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே

  • · ஏதிலர் என்னுமிவ் வூர்

  • காமத்துப்பால்: களவியல்: அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்: குறள் எண்:1130

  • உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

  • · ஏதிலர் என்னுமிவ் வூர்

==========================================================================

  • பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: கண்ணோட்டம்: குறள் எண்: 573

  • பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்

  • · கண்ணோட்டம் இல்லாத கண்

  • பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: கண்ணோட்டம்: குறள் எண்: 574

  • உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்

  • · கண்ணோட்டம் இல்லாத கண்

==========================================================================

  • பொருட்பால்: ஒழிபியல்: அதிகாரம்: சான்றாண்மை: குறள் எண்: 988

  • இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்

  • · திண்மைஉண் டாகப் பெறின்

  • அறத்துப்பால்: இல்லறவியல்: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்: குறள் எண்: 54

  • பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

  • · திண்மைஉண் டாகப் பெறின்

==========================================================================

  • பொருட்பால்: அரசியல்: அதிகாரம்: குற்றங்கடிதல்: குறள் எண்: 439

  • வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க

  • · நன்றி பயவா வினை

  • பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: வினைத் தூய்மை: குறள் எண்: 652

  • என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

  • · நன்றி பயவா வினை

==========================================================================

  • அறத்துப்பால்: துறவறவியல்: அதிகாரம்: கூடா ஒழுக்கம்: குறள் எண்: 276

  • நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

  • · வாழ்வாரின் வன்கணார் இல்

  • காமத்துப்பால்: கற்பியல்: அதிகாரம்: தனிப்படர் மிகுதி: குறள் எண்:1198

  • வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து

  • · வாழ்வாரின் வன்கணார் இல்

-நல்லசிவம் பழனிசாமி. [ந.ப.]

Search This Blog