Search This Blog

Saturday, January 15, 2011

என் ஆசைகள் 

அகங்காரம்: அறிவாளிகளிடம் மட்டுமே இருக்க வேண்டும்
ஆசை:அடுத்தவர்களுக்கு கொடுப்பவர்களிடம்  இருக்க வேண்டும்
இல்லாமை:
இருப்பவனிடம் இருக்க வேண்டும்
ஈகை:
பேராசை பிடித்தவர்களிடம் இருக்க வேண்டும்
உற்சாகம்:
சோம்பேறிகளிடம் இருக்க வேண்டும்
கோபம்: பொறுமைசாலிகளுக்கு மட்டுமே வர  வேண்டும்
வெற்றி:
திறமைசாலிகளுக்கு  மட்டுமே கிடைக்க வேண்டும்
பதவி:
தகுதி உள்ளவருக்கே கிடைக்க வேண்டும்
தண்டனை:
தவறு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்
புகழ்:
நல்லவர்களுக்கே கிடைக்க வேண்டும்
மதம்:
யானைக்கு மட்டுமே பிடிக்க வேண்டும்
பொய்:
உண்மை பேசுபவனிடம் மட்டுமே இருக்க வேண்டும்
உழைப்பு:சோம்பேறிகளிடம் இருக்க வேண்டும்
பசி:
வசதி உள்ளவனுக்கே இருக்க வேண்டும்
வறுமை:
பணக்காரனுக்கு மட்டுமே இருக்க வேண்டும்
பணிவு:
அதிகாரம் உள்ளவர்களிடம் இருக்க வேண்டும்
துணிவு:
கோழைகளிடம் இருக்க வேண்டும்
கடவுள்:
உருவத்துடன் இருக்க வேண்டும்

Search This Blog