Search This Blog

Friday, January 28, 2011

கடவுள் இருந்தால் இப்படி நடக்காது

மனிதனுக்கு சாகும் நாள் தெரியாது
ஆனால் மனிதன்
பல உயிர்கள் பரலோகம் போவதற்கு நாள் குறிக்கிறான்

மிருகங்களுக்கு மனிதன் -
     கடவுளுக்கு திருவிழா என்ற பெயரில் 
     காட்டில் வேட்டை என்ற பெயரில்
     நேர்த்திகடன் என்ற பெயரில்
கடவுள் இருந்தால் இப்படி நடக்காது

மனிதனுக்கு மனிதன் -
     நரபலி என்ற பெயரில்
     போட்டி பொறாமை என்ற பெயரில்
     பேராசை என்றால் பெயரில்
கடவுள் இருந்தால் இப்படி நடக்காது

     கருவறையில் காமம்
     உண்டியல் உடைத்து திருட்டு
     ஆன்மிகம் என்றபெயரில் அயோக்கியத்தனம்
கடவுள் இருந்தால் இப்படி நடக்காது

     அரசாங்க சொத்து அபகரிப்பு
     அதிகார துஸ்பிரயோகம்
     கடமையை செய்ய லஞ்சம்
கடவுள் இருந்தால் இப்படி நடக்காது

அண்ட சராசரங்களை படைத்தவன் எவனோ
அவனே இதற்கெல்லாம் முடிவு காணட்டும்
அவன் பெயர் கடவுளா?

Search This Blog