வசதியுள்ளவனை வரியவனாக்குவது
காரணமில்லாமல் காஸ் அடுப்பு வெடிப்பது
மகனுக்கு வாங்கும் தட்சனையில் மகளுக்கு வாழ்வு கொடுப்பது
வீட்டு மாப்பிள்ளை என்று வெட்கமில்லாமல் வாழவைப்பது
கையாலாகதவன் கட்டிய மனைவியிடம் வீரத்தை காட்டுவது
வரட்டுக் கவுரவத்தால் இன்னும் ஒழிக்க முடியாதது
மேலும் பல கொடுமைகள் இந்த மண்ணில் ........
வரதட்சணையால் பாழ்பட்ட சமுதாயம் திருந்துவது எப்போது?