மறைவதர்க்காகவே உதிக்கும் சூரியன்
பட்டுப் போவதற்காகவே வளரும் மரம்
மரணத்திர்க்காகவே வரும் ஜனனம்
இது எல்லாம் தெரிந்தும்
இடைப்பட்ட நேரத்தில் எத்தனை அலங்கோலம்
இவை எதற்கு?
உண்மை என்ன வென்றால்
சூரியன் உதிப்பதுமில்லை மறைவதுமில்லை
விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை
ஜனனம் மரணம் நம் கையில் இல்லை
எல்லாம் இயற்கையாய் நடக்கும் போது
இடையில் எதற்கு இத்தனை செயற்கை ஆட்டம்
மனிதா நீ திருந்துவது எப்போது !
விழி இருந்தும் குருடனாய் வாழாதே!
பொய்யான கௌரவத்திற்கும் போலித்தனமான வாழ்க்கைக்கும்
ஆசைப்படாமல்
சொற்ப வருமானமாய் இருந்தாலும் சுயமரியாதையுடன் வாழ்
நல்ல மனிதன் என்ற பெயராவது மிஞ்சும்
வாழத் தெரியாதவன் தான் வன்முறையில் ஈடுபடுவான்
தன்னம்பிக்கை இல்லாதவன் தான் தறி கேட்டு போவான்
உழைக்கத் தெரியாதவன் தான் ஊதாரியாவான்
நற்சிந்தனை உள்ளவன் அடுத்தவனை கெடுக்க மாட்டான்
அற்ப சுகத்திற்கு அடுத்தவனைக் கெடுக்காதே
மனிதா! மனிதா!
போலித்தனமே உன் சுயரூபமா ?
கையாலாகாத்தனமே உன் கடின உழைப்பா?
கோழைத்தனமே உன் வீரமா ?
நன்றிகெட்டத் தனமே உன் நாகரீகமா ?
அடுத்தவனை ஏமாற்றுவதே உன் புத்திசாலித்தனமா?
இயற்கையைப் பார் !
சூரியன் எங்கும் அசைவதில்லை'
மரம் எங்கும் அலைவதில்லை
பாறை இடுக்கில் கூட மரம் தானாய் வளரும்
இயற்கையாய் வாழக் கற்றுக்கொள்
பட்டுப் போவதற்காகவே வளரும் மரம்
மரணத்திர்க்காகவே வரும் ஜனனம்
இது எல்லாம் தெரிந்தும்
இடைப்பட்ட நேரத்தில் எத்தனை அலங்கோலம்
இவை எதற்கு?
உண்மை என்ன வென்றால்
சூரியன் உதிப்பதுமில்லை மறைவதுமில்லை
விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை
ஜனனம் மரணம் நம் கையில் இல்லை
எல்லாம் இயற்கையாய் நடக்கும் போது
இடையில் எதற்கு இத்தனை செயற்கை ஆட்டம்
மனிதா நீ திருந்துவது எப்போது !
விழி இருந்தும் குருடனாய் வாழாதே!
பொய்யான கௌரவத்திற்கும் போலித்தனமான வாழ்க்கைக்கும்
ஆசைப்படாமல்
சொற்ப வருமானமாய் இருந்தாலும் சுயமரியாதையுடன் வாழ்
நல்ல மனிதன் என்ற பெயராவது மிஞ்சும்
வாழத் தெரியாதவன் தான் வன்முறையில் ஈடுபடுவான்
தன்னம்பிக்கை இல்லாதவன் தான் தறி கேட்டு போவான்
உழைக்கத் தெரியாதவன் தான் ஊதாரியாவான்
நற்சிந்தனை உள்ளவன் அடுத்தவனை கெடுக்க மாட்டான்
அற்ப சுகத்திற்கு அடுத்தவனைக் கெடுக்காதே
மனிதா! மனிதா!
போலித்தனமே உன் சுயரூபமா ?
கையாலாகாத்தனமே உன் கடின உழைப்பா?
கோழைத்தனமே உன் வீரமா ?
நன்றிகெட்டத் தனமே உன் நாகரீகமா ?
அடுத்தவனை ஏமாற்றுவதே உன் புத்திசாலித்தனமா?
இயற்கையைப் பார் !
சூரியன் எங்கும் அசைவதில்லை'
மரம் எங்கும் அலைவதில்லை
பாறை இடுக்கில் கூட மரம் தானாய் வளரும்
இயற்கையாய் வாழக் கற்றுக்கொள்