Search This Blog

Thursday, March 15, 2012

நான் யார்?

நான் யார்?

எல்லோரும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி 

நான் என்னை
உறவு முறைகளால் அடையாளம் காண்பதைவிட
என்னை என் செயல்களால்
அடையாளம் காணவே, காட்டவே  விரும்புகிறேன்
ஆகவே நான் யார்?

நிச்சயம் என்னைப் போல் ஒருவன்
இதுவரை இந்த மண்ணில் இருந்தது இல்லை 
இனிமேலும் பிறக்கப் போவதில்லை
இப்போது நான்  இருக்கிறேன்
நாளை நான் இருப்பேன் அல்லது இருந்தேன்
ஆகவே நான் யார்?

எல்லோருக்கும் நல்லவனாகவே
இருக்க ஆசைப்படுகிறேன்
அப்படி இருந்தால் அதில் போலித்தனம்
இருப்பதை உணர்கிறேன்

நான் வாழும் அல்லது வாழ்ந்த வாழ்க்கையே
என் அடையாளம்

Search This Blog