Search This Blog

Thursday, October 2, 2014



காமராஜ் 
அக்டோபர் 2, நினைவு நாள் 
(15 ஜூலை 1903 - 2 அக்டோபர் 1975)

காமராசர் 
நாகரிகமான அரசியலுடன் 
நாணயமான அரசாங்கமும்  தந்தார் 

காமராசர் 
சொன்னதுடன் சேர்த்து
சொல்லாததையும்  செய்தார் 

காமராசர் 
தனி ஒரு மனிதனாக களங்கமில்லாமல் 
செய்த சாதனைகளை 
கழகங்களாலும், கழகங்களுடன் 
"கை" கோர்த்தவர்களாலும் 
செய்ய முடியவில்லை  

 காமராசர் 
விட்டுச் சென்ற பணி  தொடர 
கட்டிய அணை நீர் 
கடை மடை செல்ல வழி செய்ய வேண்டும் 

காமராசர் 
கட்டிய பள்ளியில் 
கடைகோடி தமிழன் பயில வேண்டும் 

காமராசர் 
கட்டிய தொழிற்சாலைகள் 
தடை இல்லாமல் இயங்க வேண்டும்  

காமராசர் 
நனவாக்கிக் காட்டியதை 
கனவாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் 

ராமராஜ்யம் கதை 
காமராஜ்யம் நிஜம்
 கனவு மெய்ப்பட வேண்டும் 
.ந.ப. 


Search This Blog