மற்றவர்களுக்கு நல்லதையே செய்து வாழ்பவர்கள் பின்னாளில் உடல்நலமும், பொருளாதாரமும் பாதிக்கப்படுவதற்குக் காரணம் என்ன?
பலரும் தங்களின் நன்மையை விட பிறரின் நலனில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அவர்கள் மனதளவில் உயர்ந்தவர்கள் தான், ஆனால் வாழ்க்கையின் நடைமுறை விதிகள் வேறாக வேலை செய்கின்றன.
நல்ல மனமும் உதவும் கைகளும் இருந்தாலும், தங்கள் உடல்நலம், மனநலம், பொருளாதாரம், எதிர்கால பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தாதபோது அதன் விலை பின்னாளில் வேதனையாக வருகிறது.
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது சுயநலம் அல்ல; அது வாழ்வின் அடிப்படை பொறுப்பு.
நாம் சோர்வடைந்தாலும், நோய்வாய்பட்டாலும், பொருளாதாரத்தில் வீழ்ந்தாலும், கஷ்ட நேரத்தில் நிச்சயமாக யாரும் முழுமையாக நம்மை காப்பாற்ற வரமாட்டார்கள்.
அதுதான் நிஜம், கடினமான உண்மை.
ஆகையால்,
-பிறருக்கு உதவுவது நல்லது. ஆனால் முதலில் நம்முடைய உடலும் மனமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
எப்போது வேண்டுமானாலும் நம்மை நாமே தாங்கும் அடிப்படை நிலை இருக்க வேண்டும்.
எதிர்காலத்திற்கான சேமிப்பு, ஆரோக்கியத்திற்கான கவனம், உணர்ச்சி எல்லைகள், இவை இல்லாமல் ‘நல்லவர்கள்’ தான் பெரும்பாலும் அதிகம் காயப்படுகிறார்கள்.
நல்ல மனம் கொண்டவர்களுக்கும் வலுவான பாதுகாப்பு தேவை.
அது தான் வாழ்க்கை நம்மை சோதிக்கும் நேரத்தில் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் ஒரே வழி.
.ந.ப.
