ஜோதிடம் பற்றிய கேள்வி
ஜாதகத்தில் எதிர்காலத்தை கணிப்பதைவிட கடந்த காலத்தில் நடந்ததைத் துல்லியமாகச் சொன்னால் சரியாகப் புரிந்து கொள்ளலாமே!
கடந்த காலத்தைப் புரியாமல் எதிர்காலத்தை எப்படி நம்புவது?
ஜாதகம் என்பதொரு கண்ணாடி போலிருந்தாலும், அதில் முதலில் பிரதிபலிப்பது கடந்த காலத்தின் தடங்களே. ஏற்கனவே நடந்ததை துல்லியமாகச் சொல்வதே, கணிப்பவரின் உண்மைத்தன்மையையும், ஜாதக குறிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதையும் நமக்குப் புரியவைக்கிறது. கடந்த காலம் உறுதியான தரவு. அதை மறுக்க முடியாது, மாற்ற முடியாது. அந்த உண்மைகளைப் பிடித்தால்தான், ஒருவரின் குணநலன், மனப்போக்கு, வாழ்க்கையில் சந்தித்த திருப்பங்கள் ஆகியவை தெளிவாக வெளிப்படுகின்றன. ஏனெனில் எதிர்காலம் என்றால் திசை; கடந்த காலம் என்றால் வரைபடம். வரைபடமில்லாமல் திசையைச் சொல்வது நம்பிக்கையைக் கூட்டாது. கடந்த காலத்தின் உண்மை வெளிச்சம் படும்போது, எதிர்காலம் பற்றிய வார்த்தைகளும் நமக்கு நெருக்கமாக, நியாயமாக, நம்பத்தகுந்ததாகத் தோன்றும். சரியாகப் பார்த்தால், எதிர்காலத்தைப் படிப்பதற்கு முன்னாள் அனுபவங்களே மிகச் சிறந்த முன்னுதாரணமாகும். அதனால் தான் ஜாதகத்தில் எதிர்கால கணிப்பை விட கடந்த காலத்தை துல்லியமாகப் பேசுவதுஒரு திறமையல்ல —அது ஒரு நேர்மையான அறிவியல் அணுகுமுறை. கடந்ததைப் புரிந்தவனுக்கு எதிர்காலத்தைப் புரிந்து கொள்ளும் திறன், நம்பிக்கை இயல்பாகவே உருவாகிறது ..ந.ப.
