கோவிலின் உள்ளே தட்டத்தில் போட்டால் தட்சிணை
கோவிலின் வெளியே தட்டத்தில் போட்டால் பிச்சை
பத்து ரூபா உள்ளே போட தயங்காத மனசு
பத்து பைசா வெளியே போட தயங்குவதேன்
இந்த ஏற்றத் தாழ்வு மாறவேண்டும்
கூட்டுக்குள் இருக்கும் வரைதான் புழு
வளர்சிதை மாற்றத்தால் வளரும் வண்ணத்துபூச்சி
மனிதா!!
கூட்டுப்புழுவாய் வாழாமல்
சிந்தனையை மாற்று
வாழ்க்கை வண்ணமயமாய் மாறும்
.N.P.