குறள் வெண்பா
ஈற்றடி முச்சீர், ஈற்றடி இருசீர் - பன்முறைப் பிரயோகம்
-நல்லசிவம் பழனிசாமி. [ந.ப.]
வள்ளுவர் வழங்கிய திருக்குறளில், முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் அமைந்து குறள்வெண்பா என்ற அமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த வகையில் திருவள்ளுவர் வழங்கிய 1330 குறட்பாக்களில் 23 குறட்பாக்களில் ஒருமுறை பயன்படுத்திய இரண்டாம் அடியில் உள்ள மூன்று சீர்களை மீண்டும் ஒருமுறை அதே அதிகாரத்திலோ, அல்லது மற்றொரு அதிகாரத்திலோ உள்ள மற்றொரு குறளில் பயன்படுத்தியுள்ளார். இவை உள்பட மேலும் பல குறள்களில் இறுதி இரண்டு சீர்கள் மட்டும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குறள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வள்ளுவர் ஒவ்வொரு குறளிலும் தான் சொல்லவந்த கருத்தின் ஆழத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் கடைசி இரண்டு சீர்களில் (வார்த்தைகளில்) மிகவும் அழுத்தமாக உணர்த்துகிறார். உதாரணமாக, கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக - இக்குறளில் "அதற்குத் தக" என்ற இறுதி இரண்டு சீர்களில் எல்லாம் நன்கு கற்றறிந்தபின் அதற்கேற்றபடி நடக்க வேண்டும் என்பதை அழுத்தமாகக் குறிப்பிடுகின்றார். இருசீரும், முச்சீரும் பல முறை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவைகளின் பொருள் அந்தந்த அதிகாரத்தின் கருத்து நோக்கத்தின் அடிப்படையில் வேறுபடும்.
602 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டுபவர்
580 பெயக்கண்டு நஞ்சுண்டமைவர்நயத்தக்க நாகரிகம்வேண்டு பவர்
562 கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டுபவர்
320 நோயெல்லா நோய்செய்தார் மேலவாநோய்செய்யார் நோயின்மைவேண்டுபவர்
962 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மைவேண்டுபவர்
173 சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டுபவர்
218 இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்
699 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்
654 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்
174 இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்
199 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்
114 தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்
1327 ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்
349 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்
185 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான்அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்
298 புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்
138 நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்
510 தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்
508 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்
892 பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா இடும்பை தரும்
126 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து
458 மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து
868 குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் கினனிலனாம் ஏமாப் புடைத்து
398 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து
427 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்
395 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்
406 உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்
393 கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
358 பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு
424 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு
423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
355 எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
1061 கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்
639 பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்
816 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்
817 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்
649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர்
187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்
289 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்
626 அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென் றோம்புதல் தேற்றா தவர்
388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும்
214 ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்
850 உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்
50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
132 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை
242 நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை
76 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை
914 பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர்
857 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்
915 பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்
321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்
507 காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும்
651 துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும்
891 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை
47 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம்தலை
761 உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை
844 வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு
860 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு
1193 வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு
1101 கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள
1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள
521 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள
297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று
157 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று
655 எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று
1018 பிறர்நாணத் தக்கது தானாணா னாயின் அறநாணத் தக்க துடைத்து
1173 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து
220 ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து
707 முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்
380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்
1023 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்
708 முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி உற்ற துணர்வார்ப் பெறின்
257 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின்
334 நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின்
804 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்
808 கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின்
805 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்
1162 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலும் நாணுத் தரும்
903 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்
902 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்
572 கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை
570 கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல தில்லை நிலக்குப் பொறை
1003 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை
492 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும்
522 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும்
275 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவுந் தரும்
311 சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள்
312 கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்
646 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள்
283 களவினா லாகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும்
614 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்
435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்
313 செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்
663 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்
284 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும்
411 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை
322 பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை
444 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை
202 தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
824 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்
92 அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்
666 எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்
183 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும்
692 மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கந் தரும்
574 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற் கண்ணோட்டம் இல்லாத கண்
573 பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்டம் இல்லாத கண்
1324 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை
1258 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை
826 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்
1096 உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்
121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்
168 அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்
887 செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி
888 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு துட்பகை உற்ற குடி
598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு
613 தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு
1129 இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னுமிவ் வூர்
1130 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர்
992 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு
991 எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு
564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்
563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு
502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு
1180 மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து
1305 நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து
762 உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது
235 நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது
167 அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்
28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்
286 அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர்
1126 கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார் நுண்ணியர்எம் காத லவர்
720 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல்
401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்
118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி
115 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி
1001 வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில்
446 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்
212 தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு
81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு
730 உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்
728 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்
722 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்
719 புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க ல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார்
1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு
1249 உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு
405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்
1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்
1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண்டன்ன துடைத்து
565 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து
54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்
988 இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்
839 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்
934 சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில்
452 நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு
454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற் கினத்துள தாகும் அறிவு
369 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந் துன்பத்துள் துன்பங் கெடின்
854 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்
711 அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்
721 வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்
589 ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்
501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்
213 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற
300 யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற
3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்
6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார்
136 ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து
164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக் கறிந்து
819 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு
920 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு
439 வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை
652 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை
885 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும்
884 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும்
768 அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும்
1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்
59 புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை
1014 அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற் பிணியன்றோ பீடு நடை
616 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
608 மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க் கடிமை புகுத்தி விடும்
290 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு
234 நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு
1109 ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன்
524 சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்
537 அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின்
493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்
1138 நிறையரியர் மன்னளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும்
1254 நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம் மறையிறந்து மன்று படும்
102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
124 நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது
1002 பொருளானாம் எல்லாமென் றீயா திவறும் மருளானாம் மாணாப் பிறப்பு
351 பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு
631 கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு
632 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு
278 மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்
514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்
504 குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்
724 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருள் மிக்க கொளல்
628 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்ப முறுதல் இலன்
629 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்ப முறுதல் இலன்
716 ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
717 கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொற்றெரிதல் முன்னர் இழுக்கு
262 தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள் வது
1055 கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது
852 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை
317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை
647 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது
693 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது
216 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்
217 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்
201 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு
180 இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு
634 தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு
633 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு
1198 வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்
276 நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்
1234 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்
1235 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள்
1118 மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி
1210 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி
528 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்
1160 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர்
364 தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்
362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்
871 பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று
82 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்
582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்
1207 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்
799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும்