வளமான வாழ்க்கை வாழ….
நோயில்லாமல் வாழ வேண்டுமானால் நாம் உண்ணும் உணவு நம் உடலில் உள்ள உறுப்புக்களைப் பாதுகாக்கத்தான் என்ற உணர்வுடன் உண்ணவேண்டும். இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும், அதற்குத் தேவையான உணவு வகைகளும் தேவையான அளவு உள்ளது. இயற்கைக்கு மாறாக நம் வாழ்க்கை முறை அமைந்ததால்தான் இவ்வளவு நோய்களும், அல்லல்களும். இயற்கையை ரசிப்போம், இயற்கையான உணவுவகைகளை உண்போம், இன்பமாக வாழ்வோம். இயற்கை நமக்களித்த மரபணுக்களைப் பாதுகாத்து மாற்றமில்லாமல் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வதே இயற்கை நமக்களித்த அறிய வாய்ப்பு. ஆகவே நாம் உண்ணும் உணவு உடல் உறுப்புகளை மட்டுமல்ல நம் சந்ததிகளையும் பாதுகாக்க அளவோடு உண்டு வளமாக வாழ்வோம்.
.ந.ப.