அன்று
நேருக்கு நேர் நின்று,
வீரத்தோடு போர் புரிந்தான் வீரன்.
யானைப்படையில்,
குதிரைப்படையில்,
தரைப்படையில்,
காலாட்படையில்,
முற்றுகையிட்ட வெளியில்,
முன்னறிவிப்புடன்
போர் புரிந்தான்.
வீரர்கள் மட்டுமே
வீரமரணம் அடைந்தனர்.
நாட்டைக் கைப்பற்றி,
நல்லாட்சி மலர்ந்தது.
இன்று
நேருக்கு நேர் சந்திக்காமல்,
விமானங்கள்,
ராக்கெட்டுகள்,
ட்ரோன்கள் மூலம்,
செயற்கை நுண்ணறிவின் வழியாக,
எந்த முன்னறிவிப்பும் இன்றி,
போர்வீரர்கள் சிலர்,
அப்பாவிகள் பலரின்
அகால மரணத்துக்கு
காரணமாகின்றனர்.
இப்படி நடப்பது போரல்ல.
அதில் வீரமில்லை.
அதில் மனிதம் இல்லை.
கிஞ்சித்தும் இரக்கமில்லை.
விஞ்ஞானத்தின் வலிமையும்,
மனிதத்தின் பலவீனமும்
இங்கே சோதிக்கப்படுகிறது.
விஞ்ஞானம் உயர்ந்தது,
மனிதம் தாழ்ந்தது —
அதற்கே இன்றைய போர் சாட்சி.
