காற்று மாசாகிறது என்று தெரியும் —
ஆனால் எண்ணெய் வளத்தை சுரண்டுவதை நிறுத்தவில்லை.
புற்றுநோய் வரும் என்று தெரியும் —
ஆனால் புகை பிடிப்பதை நிறுத்தவில்லை.
கல்லீரல் கெடும் என்று தெரியும் —
ஆனால் மது அருந்துவதை நிறுத்தவில்லை.
தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்று தெரியும் —
ஆனால் தவறு செய்வதை நிறுத்தவில்லை.
அறிவு இருக்கிறது…
ஆனால் மாற்றம் இல்லை.
அழிவு தெரியும்…
ஆனால் பழக்கம் விடவில்லை.
மனிதன் அறிவால் வளர்ந்தான்…
ஆனால் தனது செயல்களால் தன்னைத் தானே தண்டித்துக் கொண்டிருக்கிறான்.
.ந.ப.
